2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொன்னாலை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி மக்கள் மீள்குடியேற்றக் கோரிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சங்கவி)

பொன்னாலை உயர்பாதுகாப்பு வலயப்பகுதி மக்கள் தங்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பான மகஜர் ஒன்றை இப்பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று கையளித்துள்ளனர். அந்த மகஜரில்,

"கடந்த 13 வருடங்களுக்கு மேலாக எமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். இவ்விடயம் குறித்து எந்தவொரு அதிகாரிகளும் நடவடிக்கைகள் எவையும் எடுக்கவில்லை. இது குறித்து நாம் மிகவும் வேதனை அடைந்துள்ளோம்.

பொன்னாலையில் ஒருபகுதி மக்கள் குடியேறுவதற்று அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்குப் பகுதி மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. 1996 ஆம் ஆண்டு தொடக்கம் உயர்பாதுகாப்பு வலயமாக இப்பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர்க்காலச் சூழ்நிலைகள் காரணமாக இங்கிருந்து வெளியேறிய 400 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்தி 300 பேர்வரையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

யாழ். குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் தற்போது குடியேற்றம் இடம்பெற்று வருகின்ற நிலையில் எமது பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்விடயத்தில் கவனம் எடுத்து எமது மீள்குடியேற்றத்துக்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்" என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், வலி. மேற்குப் பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X