Super User / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி நாகர்கோயில் நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை தொடக்கம் அபிசேகம் நடைபெற்று வருகின்றது.
கடந்த காலங்களில் நிலவிவந்த யுத்தம் காரணமாக 2000 ஆம் ஆண்டு இப்பகுதியை விட்டு மக்கள் வெளியேறியதை அடுத்து இங்கு பூசை வழிபாடுகள் எதுவும் நடத்தப்படாத நிலையில் ஆலயம் மூடப்பட்டு இருந்தது.
தற்போது சுமூகமான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டதை அடுத்து இங்கு பூசை வழிபாடுகள் மேற்கொள்வதற்கு பாதுகாப்புப் படையினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து கடந்த சில மாதங்களாக இங்கு பாலஸ்தாபனம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இவ்வருடம் இங்கு வருடாந்தத் திருவிழாவை மேற்கொள்ள முடியாத நிலையில் திருவிழாக் காலத்துக்கான விசேட அபிசேகம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றது.
இந்த அபிசேகம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை மகா சங்காபிசேகத்துடன் நிறைவடையும்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago