2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மேலைத்தேய இசைத்துறையை மாணவரிடையே வளர்க்கக் கோரிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)


மேலைத்தேய இசைத்துறையை வளர்க்க வடமாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சர்வதேச நாடுகளின் பொது மொழியாகக் காணப்படும் ஆங்கில மொழியை மாணவர்களிடையே வளர்த்தெடுக்க இது சாத்தியமான ஒரு முறையாகும் என்று உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி சிராணி மில்ஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையே நடைபெற்ற மேலைத்தேய இசைப் போட்டி, உடுவில் மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில்   உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்ததாவது:
 
கடந்த காலத்தில் எமது கல்லூரியில் மேலைத்தேய இசை அறிமுகம் செய்யப்பட்டதுடன்  மாணவர்கள் போட்டிகளிலும் கலந்து கொண்டனர். இதன் மூலம் மாணவர்களுக்கு இடையே ஆங்கில அறிவும் அதேவேளை தேடல்களும் கூட அதிகரித்துக் காணப்பட்டது.

இன்று இந்த மேலைத்தேய இசை நிகழ்வில் ஆங்கில மொழியின் பால் ஆர்வம் கொண்ட பாடசாலைகள் கலந்து கொண்டுள்ளன. இதனை வட மாகாண கல்வித் திணைக்களம் பாடசாலை, கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம் என்று ஒவ்வொரு மட்டங்களிலும் ஏனைய போட்டிகளை நடத்துவதைப் போன்று நடத்த முன்வர வேண்டும்.-என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X