2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி நகை, பணம் கொள்ளை

Super User   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

யாழ். குப்பிளான் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான பணமும் நகையும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

கொள்ளையர்கள் மேற்படி வீட்டின் கதவை உடைத்தபோது வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த உரிமையாளர், சத்தத்தை கேட்டு உள்ளேவர, 4 பேர் சேர்ந்து மயக்க மருந்து கலக்கப்பட்ட துணியை அவரின் முகத்தில் போட்டு மயக்கமடையச் செய்துவிட்டு, வீட்டிலிருந்த ஏனையோரை பயமுறுத்தி அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொல்லுகள், தடிகளுடன் வந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பெண்மணியிடம் தாலிக்கொடியை கேட்டு பயமுறுத்தினர். அப்போது அப்பெண் தன்னிடம் தாலிக்கொடி இல்லையென்று கூறியதாகவும், அதற்கு, கொள்ளையர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பதாக அப்பெண்ணின் கழுத்தில் தாலிக்கொடியை இருந்ததைக் கண்டதாக கூறியதாகவும் புகாரிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X