2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுன்னாகம் சமுர்த்தி வங்கிக் கிளையில் திருட்டு முயற்சி

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சங்கவி)

சுன்னாகம் சமுர்த்தி வங்கிக் கிளையில் நேற்றிரவு திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பெட்டகத்தில் பெறுமதிவாய்ந்த பொருள்கள் வைக்கப்பட்டிருந்தமையால் பாரிய அளவில் திருட்டு எதுவும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் மின் நிலையத்துக்கு அண்மையில் உள்ள குறித்த வங்கியின் கூரையை பிரித்து உள்ளே நுளைந்த திருடர்கள் அங்கிருந்து ஒருசில பொருள்களைத் திருடிச் சென்றுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உடுவில் பிரதேச செயலகத்திலும் முறையிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X