2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்டத்தின் பலபகுதிகளில் மின் விநியோக தடை

A.P.Mathan   / 2010 நவம்பர் 12 , மு.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் பல பாகங்களிலும் எதிர்வரும் 13ஆம், 14ஆம் திகதிகளில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என மாவட்ட மின்பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

உயர் அழுத்த மின்மார்க்கங்களின் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக இந்த மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி புன்னாலைக் கட்டுவன், அச்செழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராச்சி பிரதேசம், கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூலாய், காரைநகர் பிரதேசம், தீவகப்பிரதேசம், அராழி, கரந்தன், நீர்வேலி, சிறுபிட்டி, ஆகிய இடங்களிலும், காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையிலும் மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படும்.

எதிர்வரும் 14ஆம் திகதி கரந்தன், நீர்வேலி, சிறுபிட்டி, கோப்பாளை, இருப்பாளை, கல்வியங்காடு, நல்லூர், அரியாளை, தென்மராட்சி ஆகிய பிரதேசங்களில் காலை 8 மணி தொடக்கம் 9 மணித்தியால மின்சார விநியோகத்தடை அமுலில் இருக்கும்.

இதனிடையே, திருத்தப்பணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாக நிறைவுறும் பட்சத்தில் மின்சார விநியோகம் விரைவில் வழங்கப்படும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட மின்பொறியியலாளர் காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X