Kogilavani / 2010 நவம்பர் 12 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்ணன்
பருத்ததித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உப்புறோட் வல்லைச் சந்தி தொடக்கம் வல்லை முச்சந்தி வரையான வீதி மீண்டும் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
பிரதான வீதி அகலாமாக்கப்பட்டு வருவதனால், அதனை பூர்த்தி செய்யும் பொருட்டு இக்குறுந்தூர வீதி இருவாரங்களுக்கு முன்னர் மூடப்பட்டிருந்தது.
இக்குறுந்தூர வீதி மூடப்பட்டிருந்த வேளை பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நெல்லியடி ஊடாகச் சென்றுவரும் அனைத்து வாகனங்களும் வல்லை உப்புறோட் சந்தியிலிருந்து வல்லை நாற்சந்தி ஊடாகவும் வல்லை முச்சந்தி வழியாகவும் போக்கு வரத்துச் செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தற்போது இக்குறுந்தூர வீதி அகலமாக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து இவ்வீதி போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆயினும் இக்குறுந்தூர வீதியில் உள்ள பெரிய மதகின் திருத்தவேலைகள் நிறைவடையாமையினால்இ மதகின் அருகில் போடப்பட்டுள்ள தற்காலிக பாதை ஊடாக அவ்விடத்தில் போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
11 minute ago
13 minute ago
21 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
21 minute ago
30 minute ago