Suganthini Ratnam / 2010 நவம்பர் 12 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
குறிகட்டுவான் - நெடுந்தீவு பயணிகளின் போக்குவரத்திற்கென நிர்மாணிக்கப்பட்டு வரும் படகினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்று வெள்ளிக்கிழமை சென்று பார்வையிட்டார்.
குறிகட்டுவான் - நெடுந்தீவு பயணிகளின் போக்குவரத்திற்காக படகு தேவைப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு ஏற்கெனவே கொண்டுவந்திருந்தார்.
இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் இப்படகு கொழும்பு துறைமுகத்தில் டொக்யார்ட் நிறுவனத்தினால் 8 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இப்படகின் நிர்மாணப் பணிகள் பாதி பூர்த்தியான நிலையில், மீதி வேலைகள் கூடிய விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலவசப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள இப்படகு சேவை மூலம், குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கிடையிலான பயணிகள் பயனடைவார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது.
.jpg)
.jpg)
.jpg)
19 minute ago
21 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
29 minute ago
38 minute ago