Super User / 2010 நவம்பர் 12 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு யாழ்ப்பாணத்தில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.
இன்று மாலை யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அமர்வில் பேராசிரியர்கள் ரட்ணஜீவன் கூல், பாலசுந்தரம் பிள்ளை உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் சாட்சியமளித்தனர்.
பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், சாட்சியமளிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமெனக் கூறினார்.
பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை சாட்சியமளிக்கையில், கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனக் கூறினார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரும் இன்று சாட்சியமளிக்கச் சென்றிருந்தார். எனினும் நேரம் போதாமையால் இன்று சாட்சிமளிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நாளை சனிக்கிழமை தான் சாட்சியமளிப்பதற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளதாக தயா மாஸ்டர் தமிழ் மிரர் இணையத்தளத்திற்குத தெரிவித்தார்.
இன்று காலை அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் நடைபெற்ற ஆணைக்குழுவின் அமர்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருவதாக கூறி கப்பம் பெறப்பட்டது தொடர்பான சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாளைய தினம் வடராட்சி, தென்மராட்சி ஆகிய இடங்களிலும் மறுநாள் தீவகத்திலும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.
11 minute ago
13 minute ago
21 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
21 minute ago
30 minute ago