Suganthini Ratnam / 2010 நவம்பர் 14 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான முதலீட்டு ஊக்குவிப்புத்திட்டத்தின் கண்காட்சியும் கருத்தரங்கும் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 08.30 மணி தொடக்கம் மாலை 03.30 மணி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில், உள்ளுர் உற்பத்திப் பொருட்களைச் செய்யக்கூடிய தொழிற்றுறைகள் பற்றியும் கவனத்திற் கொள்ளப்படுகிறது.
இந்தக் கருத்தரங்கும் கண்காட்சியும் முதலீட்டுத்துறையை ஊக்குவிப்பதுடன், வேலையில்லாப் பிரச்சினைக்கு மறைமுகமாகத் தீர்வைக் காணும் நோக்கிலும் நடத்தப்படுகின்றன என கைத்தொழில் அதிகாரசபையின் யாழ். மாவட்டச் செயலக உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் முதலீட்டு ஊக்குவிப்புத்திட்ட கண்காட்சியிலும் கருத்தரங்கிலும் முதலீட்டுத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 minute ago
20 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
28 minute ago
37 minute ago