Super User / 2010 நவம்பர் 15 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
வடக்கிலிருந்து கல்விமான்களும் நல்ல சேவை மனப்பாங்குள்ள அரசியற் தலைவர்களும் உருவாகவேண்டும். நீண்ட காலத்துக்குப் பின்னர் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மக்களின் வாழ்க்கையும் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்.
இலங்கை முழுவதையும் அபிவிருத்தி செய்து உலகில் உள்ள முன்னணி நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றவே ஜனாதிபதி விரும்புகின்றார் என இளைஞர்களுக்கான நளை அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபகஷ தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டில் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த ஆரம்பப் பணிகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே நாமல் ராஜபக்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகளை விஸ்தரிக்கும் பணிகள் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று யாழ்ப்பாணத்தில் இந்தப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகளில் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பொறியியலாளர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வீதி அபிவிருத்திச் சபையின் அபிவிருத்திப் பணிகளில் யாழ். குடா நாட்டிலுள்ள நான்கு பிரதான வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
பருத்தித்துறை–யாழ்ப்பாணம், காங்கேசன்துறை-யாழ்ப்பாணம், பலாலி-யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் - கண்டி ஆகிய வீதிகளே இவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இந்த ஆரம்பித்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பண்ணைச் சந்தி, ஸ்ரான்லி வீதிச் சந்தி, புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றன.
இந்த வீதிகளை சீனாவின் நிதியுதவியுடன் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் அபிவிருத்தி செய்து வருகிறது.
.jpg)
.jpg)
11 minute ago
13 minute ago
21 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
21 minute ago
30 minute ago