Suganthini Ratnam / 2010 நவம்பர் 16 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 348 பேர் பங்குபற்றிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியொன்றில் யாழ்ப்பாண மாணவர் ஒருவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இக்னோ யுனெஸ்கோ விஞ்ஞான ஒலிம்பியாட் 2010 என்ற பெயரில் கடந்த ஓகஸ்ட் மாதம் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்று வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வநித்திலன் சிவபாலன் என்பவரே இந்த போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டவராவார்.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்ட 102 பரீட்சை நிலையங்களில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன.
இதில் முதல் 41 பேருக்கு பதக்கங்கள் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. முதலாம் இடத்தை இந்தியாவின் ஹதராபாத்தைச் சேர்ந்த எச்.ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.
ஏற்கனவே கடந்த வருடம் மலையகத்தின் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இதில் பரிசில் பெற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
19 minute ago
28 minute ago