Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

புனரமைக்கப்பட்ட யாழ். பாசையூர் மீன் சந்தை இன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதிறந்து வைக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த இச்சந்தை யாழ். மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. சந்தைக் கட்டிடத்திற்கென 18 இலட்சம் ரூபாவும் வீதி மற்றும் மதகுக்கென 13 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதன் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தை வளாகத்தை பார்வையிட்டதுடன் வியாபாரிகளின் கோரிக்கைகள் சிலவற்றையும் உடனடியாகச் செய்து தருவதாக உறுதியளித்தார்.

19 minute ago
21 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
29 minute ago
38 minute ago