2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழின் சில பிரதேசங்களில் நாளை மின்சார தடை

A.P.Mathan   / 2010 நவம்பர் 20 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளைய ஞாயிற்றுக்கிழமை மின்சார விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் சுன்னாக பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இந்த மின்சார விநியோக தடை அமுல்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயரழுத்த மின்மார்க்கங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் இந்த மின்சார விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. இதற்கமைய, சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, அளவெட்டி, தெல்லிப்பளை, பன்னாலை ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X