2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் காணாமல்போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

A.P.Mathan   / 2010 நவம்பர் 21 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமராட்சியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மர்மமான முறையில் காணாமல்போன குடும்பஸ்தர் ஒருவர் இன்று கோவில் ஒன்றுக்கு அருகில் உள்ள பற்றையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான புலோலி வடமேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த வடிவேலு செல்வரட்ணம் (வயது-48) என்பவரே மந்திகை கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள பற்றை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த இவர் திரும்பி வரவே இல்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இவரை தேடி வந்திருக்கின்றனர். ஆலய சுற்றுசூழலில் துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் இப்பிரதேசத்தில் மிகுந்த பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X