2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தென்னிந்திய மீனவர் வருகையில் வட மீனவர்களின் அக்கறை குறைவு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 23 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

தென்னிந்திய மீனவர் வருகைக்கு வடக்கு மீனவர்கள் அக்கறை காட்டவில்லையென கடற்தொழில் சமாச பிரதிநிதி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்டுவருவதால் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையேயும் கடற்படையினர்களுக்கு இடையேயும் பல முரண்பாடுகளும் தோன்றி வருகின்றது.

இதனை தீர்க்கும் முகமாக இலங்கையில் இருந்து மீனவர் குழு ஒன்று வருட ஆரம்பத்தில் இந்தியாவிற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் இந்திய மீனவர்கள் தாம் வருடத்தில் 70 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த கோரிக்கை இலங்கை மீனவர் குழுவினால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய மீனவர் குழு இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

இது தொடர்பாக யாழ் கடற்தொழிலாளர் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதி தகவல் தருகையில், இந்திய மீனவர் குழுவினர் தொடர்பாக எந்தவித தகவல்களும் எமக்குக்
கிடைக்கவில்லை.

எனினும் இக்குழுவினரால் எந்தவிதமான பிரியோசனங்களும் கிடைக்கப் போவதில்லை எனவும் தெரிவித்த அவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வட பகுதியை அவர்கள் பார்வையிடுவதற்கு அக்கறை காட்டவில்லை எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X