2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தின் பின் கண்டுபிடிப்பு

Super User   / 2010 நவம்பர் 23 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

யாழ் மருதனார் மடத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்ட சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான பல்சர் மோட்டார் சைக்கிள் வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் யாழ்.மருதனார் மடத்தில் இராணுவத்தினர் நடத்திய இன்னிசை விருந்தின்போது குறிப்பிட்ட மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயிருந்தது.

இது சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்கள் உட்பட ஏனைய மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் ஏற்க்கனவே தகவல்கள் வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வவுனியாவில் இடம்பெற்ற விபத்தொன்றின்போது குறிப்பிட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் அகப்பட்டவர்களினால் கைவிடப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X