2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வட மாகாண பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை, கவிதை போட்டிகள்

Super User   / 2010 நவம்பர் 23 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வட மாகாண இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில்  வட மாகாண பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணத்தில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்ற முடியும்.

கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றும் மாணவர்கள் சுதந்திரப் பயணம் எனும் தலைப்பில் 1500 சொற்கள் அடங்கலாக ஒரு பக்கத்தில் மாத்திரம் கட்டுரைகளை வரைய வேண்டும்.

கவிதைப் போட்டியில் கலந்துகொள்வோர் சுதந்திரம் எனும் தலைப்பில் 300 சொற்களுக்குள் கவிதைகளை வரைய வேண்டும்.

கவிதை மற்றும் கட்டுரைகள் என்பன வட மாகாணத்தை மையமாக வைத்து எழுதப்படல் வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கட்டுரை அல்லது கவிதையை பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டுரைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் ஆர். ரஸ்மின் செயலாளர் இலக்கிய மன்றம் இல. 295, கொழும்பு வீதி, தில்லையடி, புத்தளம் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X