Suganthini Ratnam / 2010 நவம்பர் 24 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
கிளிநொச்சி நகரப்பகுதியில் மீளக்குடியேறுவதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீளக்குடியேறுவதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டபோதுஇ இது தொடர்பாக கிளிநொச்சி நகரப்பகுதி படையதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
கிளிநொச்சி நகரத்திலுள்ள பரவிப்பாஞ்சான்இ கிருஷ்ணன் கோவிலடி ஆகிய பகுதிகளில் மக்கள் மீளக்குடியேறுவதற்கு படைத்தரப்பு அனுமதியை இன்னும் வழங்கவில்லை. இதனால்இ இந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் ஒரு தொகுதியினர் கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் ஏனையோர் உறவினர்இ நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
தமது மீள்குடியேற்றம் தாமதமாகுவதால்இ தமக்கான வீடமைப்பு நடவடிக்கைகளும் வேறு உதவிகளும் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாகவும் தாம் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழவேண்டியிருப்பதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
பரவிப்பாஞ்சான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம், அரசியல் துறையின் நடுவப் பணிமனை மற்றும் நிர்வாகப் பணிமனைகள் அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago