2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். வர்த்தக நிலையங்களில் பொருட்களை காட்சிப்படுத்தல், ஒழுங்குபடுத்துதலுக்கான இடங்களை அடையாளம் காணல்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 24 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட யாழ். நகர் வர்த்தக நிலையங்களில் பொருட்களை காட்சிப்படுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதலுக்கான இடங்களை அடையாளம் இடும் நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ். நகரை அழகுபடுத்துதல், ஒழுங்குபடுத்துதலின் கீழ் வர்த்தக நிலையங்களில் பொருட்களை காட்சிப்படுத்துதல் மற்றும் நடைபாதை போக்குவரத்தை தடைசெய்யாது இருப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக யாழ். மாநகரசபை அதிகாரிகள் இருவர், யாழ் பொலிஸ் அதிகாரிகள் இருவர், வர்த்தகர்கள் ஒவ்வொரு பிரிவுக்கும் இருவர் இருவராக நேரில் விஜயம் செய்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளனர்.

யாழ். நகரின் நவீன சந்தை உட்புறம், வெளிப்புறம், மற்றும் மின்சாரநிலைய வீதி, கஸ்தூரியார் வீதி, கே.கே.எஸ் வீதியென அனைத்து பகுதிகளிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X