Suganthini Ratnam / 2010 நவம்பர் 24 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். நகர பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சட்ட ஒழுங்குகள் பேணப்படவுள்ளதாகவும் இதற்கு அனைத்து வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென யாழ். மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
யாழ். நகர் வர்த்தக சங்கத்தினருடன் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடல் யாழ.; மாநகரசபை மேஜர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகரசபை பொறியியலாளர், மேற்பார்வை
உத்தியோகத்தர்கள், யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்வர்த்தகசங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இங்கு மேலும் தெரிவித்த ஆணையாளர், யாழ்ப்பாணத்தில் எவரும் சட்டத்தைப் பேணவில்லை. இனிவரும் காலத்தில் அனைவரும் சட்டத்தைப் பேணவேண்டும். யாழ். நகரின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் ஒழுங்குபடுத்தி அழகுபடுத்த வேண்டும்.
இனிவரும் காலத்தில் நகர அபிவிருத்திக்கு அமைவாக செயல்ப்பட வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் பொருட்களை காட்சிப்படுத்தவேண்டும். நடைபாதையை தடைசெய்யக் கூடாது.
யுத்தம் நடைபெற்ற காரணத்தால் எவரும் சட்டத்தை மதித்து செயல்படவில்லை. இதனால் அத்துமீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இனிவரும் காலத்தில் இவ்வளவிற்கு இடம்கொடுக்காது செயற்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago