Super User / 2010 நவம்பர் 24 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
சாவகச்சேரியில் மக்களின் தேவைகளை நிவர்த்திக்கும் பொருட்டு நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவையினை நீதிச் சேவைகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நடமாடும் சேவை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் மக்கள் சேவையில் காலங்கடந்த பிறப்பு, இறப்புப் பதிவுகள் தொடர்பான பிரச்சினைகள், காணி நிர்வாக விவகாரங்கள், சட்ட வல்லுநர்களின் உதவியுடனான சட்ட ஆலோசனைகள், ஓய்வூதிய பிரச்சினைகள் போன்ற முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டு தீர்வு காணப்படவுள்ளன.
இதேவேளை இந்த நடமாடும் மக்கள் சேவையின் இன்னொரு அம்சமாக தென்னிலங்கையைச் சேர்ந்த இருபது மருத்துவர்கள் பங்கேற்கும் மருத்துவ முகாமும் இடம்பெறவுள்ளது.
21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago