2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் ஒரு கோடி ரூபா செலவில் நெற்களஞ்சியம்

Super User   / 2010 நவம்பர் 24 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த)

கிளிநொச்சி, கரைச்சி தெற்குப் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான நெற்களஞ்சியம் மற்றும் அரிசி ஆலை ஆகியன ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படுகின்றன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யு.எஸ்.எயிட் நிறுவனம் இந்த நிதியை புனரமைப்புப் பணிகளுக்காக வழங்குகின்றது என கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மோகனபவன் தெரிவித்தார்.

உருத்திரபுரம் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நெற்களஞ்சியமும் அரிசி ஆலையும் கடந்தகால யுத்தத்தினால் பாதிப்படைந்தது.

இதனால் நெல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் நெல்லைச் சந்தைப் படுத்த முடியாமல் கடந்த அறுவடையின்போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X