Super User / 2010 நவம்பர் 25 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவி சுகி)
யாழ்ப்பாணம் - கொக்குவில் நந்தாவிலைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொக்குவில் பகுதியைச் செந்த சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 33 வயதான பெண்ணொருவரே தற்கொலை செய்துள்ளார். குடும்பப் பிரச்சினையொன்றின் காரணமாக இவர் கணவருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.அரியநாயகம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மரண விசாரணைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago