Suganthini Ratnam / 2010 நவம்பர் 26 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தினால் ஆனையிறவுப் பகுதியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது.
ஆனையிறவு - தட்டுவன்கொட்டிச் சந்தியில் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்கான அனுமதி நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் ஏற்பாட்டின் மூலம் பெற்றோலியவளத்துறை அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக சமாசத்தின் தலைவர் எஸ்.கணேசபிள்ளை தெரிவித்துள்ளார்.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைப்பதற்கான காணியை கரைச்சிப் பிரதேச செயலகம் வழங்கியுள்ளது.
இதேவேளை, கல்லாறுப் பிரதேசத்திலுள்ள மீனவர்கள் தொழிலில் ஈடுபடுவதற்காக கடற்றொழில் நீர்வள அமைச்சரின் அறிவிப்பிற்கமைய பேய்ப்பாறைப்பிட்டிப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
14 minute ago
16 minute ago
24 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
24 minute ago
33 minute ago