2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் மின்சாரத் தடை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மின்சாரசபையால், உயர் அழுத்த மின்மார்க்கங்களில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மின்விநியோகம் தடை செய்யப்படுமென  யாழ். பிரதேச மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை ஆகிய உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படுமெனவும் அவர் கூறினார்.

மேலும், திருத்தவேலைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக முடிவுற்றால் உடனடியாக  மின்விநியோகம் வழமைக்கு திரும்புமெனவும் யாழ். பிரதேச மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X