2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பகிடிவதை தொடர்பாக யாழ். பல்கலை மாணவர்கள் மூவர் இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

மாணவர்களுக்கிடையே பகிடிவதை என்ற போர்வையில் விடுதியில் வைத்து மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மூவர் கற்றல் செயல்பாட்டிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.  


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் பகிடிவதைக்குள்ளானதைத் தொடர்ந்து அளவுக்கதிகமான பரசிட்டமோல் ரகக் குளிசைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களெனக் கருதப்படும் மாணவர்கள் மூவர் தற்காலிகமாக உடனடியாக கல்விச்செயல்பாடுகளிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.


நான்கு நாட்களுக்கு முன்னர் வன்னியிலிருந்து வந்து தடுப்பு முகாமிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று வந்த மாணவனே பகிடிவதை சம்பவத்தைத் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவர். 

இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் துணைவேந்தரின் பணிப்புரையின் பேரில் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து தற்போது தற்காலிகமாக கற்றல் செயல்பாடுகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0

  • e yogi oslo norway Saturday, 27 November 2010 09:09 AM

    பகிடி வதை என்பது மனித நாகரிகமற்றது அதிலும் நொந்து நொடிந்து தனது புதிய வாழ்வை ஆரம்பிக்க முனையும் ஒரு சக மாணவனை இந்த நிலைக்கு ஆளாக்கிய மூவரையும் பல்கலைகழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் மேலை நாடுகளில் தற்போது இந்த மாதிரியான நடைமுறைகளைத்தான் கடைப்பிடிக்கின்றார்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X