2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அமெரிக்க பல்கலைக்கழக உயர் மட்டக்குழு அடுத்த மாதம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

A.P.Mathan   / 2010 நவம்பர் 28 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அமெரிக்காவிலுள்ள மிக்சிக்கன் ஸ்ரேப் பல்கலைக்கழகத்தின் உயர்மட்டக் குழுவொன்று அடுத்த மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், அமெரிக்கா சென்றபோது மிக்சிக்கன் ஸ்ரேப் பல்கலைக் கழகத்திற்கும் சென்றிருந்தார். அப்போது அவர் விடுத்த அழைப்பை ஏற்று அமெரிக்க பேராசிரியர்கள் குழு யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளது. பேராசிரியர் ஹரிம் தலைமையில் யாழ்ப்பாணத்துக்கு வரும் இவ் உயர்மட்டக் குழுவினர் இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருந்து விவசாய ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மேம்பாடு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளனர்.

விவசாய பீடத்தின் செயற்பாடு, விவசாய ஆராய்ச்சி உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X