2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். மாநகர சபைக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 30 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். மாநகரசபைக்கு எதிராக தொல்லியல் திணைக்கள யாழ் அலுவலகத்தால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். நகர வீரசிங்க மண்டப முன்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பெக்கோ இயந்திரத்தின் மூலம் யாழ். கோட்டையின் அகழிக்குள் அகற்றியுள்ளனர்.

இதன்போது கோட்டையின் அகழியின் சுவர் அனுமதியின்றி உடைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே யாழ். பொலிஸில் முறைப்பாடொன்று செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். கோட்டை நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது. புனரமைப்பின்போது கட்டடங்கள் சேதமடையாதவாறே கட்டடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாநகரசபையின் செயற்பாடு அனுமதியில்லாமலும் முன்னறிவித்தல் ஏதுமின்றி உடைக்கப்பட்டது தொடர்பாக தொல்லியல் திணைக்கள யாழ். அலுவலக அதிகாரிகளால் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளதாக திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X