2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தகவல் நிலையம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 23 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில்  அமெரிக்க தகவல் நிலையம் ஒன்று நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஸியா புட்டினிஸ் அம்மையாரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிலையம் யாழ்ப்பாணம் நான்காம் குறுக்குத் தெரு, இலக்கம் 159இல் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு நிலையத்தில் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் புவியியல் வரலாறு, உலக நாடுகளுக்கான அமெரிக்க உதவி, அமெரிக்க கலாசார பண்பாட்டுகள் போன்ற முக்கிய தகவல்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுவதுடன், சஞ்சிகைகள், நூல்கள் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும். அத்துடன் இங்கு மாணவர்களுக்கான இணையத்தள வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

யாழில்; அமெரிக்க தூதுவர் பற்றீஸியா புட்டினிஸ் இரண்டு நாட்கள் தங்கியிருந்து, அமெரிக்க அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் விசேட அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதுடன், யாழ்ப்பாணத்தின் எதிர்கால செயற்பாடுகளை திட்டமிடுவதற்காக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் திணைக்களத் தலைவர்களை சந்தித்து உரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X