Super User / 2011 பெப்ரவரி 08 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, குடும்பப் புகைப்படங்களைப் பிடிப்பதற்கு கட்டாயப்படுத்துவதாகவும் சிங்களத்தில் உள்ள பல படிவங்களில் கையெழுத்திடுமாறு நிர்ப்பந்திப்பதாகவும் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை இராணுவம் நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எழுதிய கடிதத்தில் மேற்படி குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.
இக்குற்றசாட்டுகளை அடிப்படையற்றவை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல இன்று செய்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
'பொலிஸ் கட்டளைச் சட்டத்தின்படி ஒவ்வொரு பிரஜையும் பதிவுசெய்து கொள்வது அவசியமாகும். யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல, கம்பஹா போன்ற இடங்களிலும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் இலத்திரனியல் முறையிலான அடையாளங்காணல் திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளன.
இராணுவம் எதற்காக யாழ். நகரில் பொது இடங்களில் குடும்பப் புகைப்படங்களைப் பிடிப்பதற்கு பணம் வசூலிக்க வேண்டும்? இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. நாம் இவற்றை முற்றாக நிராகரிக்கிறோம்' என மேஜர் ஜெனரல் உபய மெதவல கூறினார்.
'யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்களை பேணும் நடவடிக்கைகளை இராணுவத்தின் உதவியுடன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இராணுவம் வீதி அபிவிருத்தி போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது' என அவர் தெரிவித்தார்.
7 minute ago
12 minute ago
21 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
21 minute ago
21 minute ago