2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வட மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் குடிநீர் திட்டம்: ஆளுநர்

Super User   / 2011 பெப்ரவரி 10 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர் திட்டங்களை மேற்கொள்வதற்காக 17,880 மில்லியன் ரூபா செலவில் பாரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி .ஏ சந்திரசிறி தெரிவித்தார்.

இத்திட்டத்திற்கென ஆசிய அபிவிருத்தி வங்கி 9,810 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்க இணக்கம் காணப்பட்டு இதற்கான உடன்படிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதில் 9,810 மில்லியன் ரூபாவை ஆசிய அபிவிருத்தி வங்கியும் 5,232 மில்லியன் ரூபாவை பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனமும் வழங்கவுள்ளன. அத்துடன் விவசாயத்துறை அபிவிருத்திக்காக சர்வதேச நிதியம் 2,180 மில்லியன் ரூபாவை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின்  இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கலாநிதி ரிச்சர்ட் டபிள்யூ. சொக்ஸ் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X