Suganthini Ratnam / 2011 மார்ச் 15 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமாருக்கும் சுவிஸ் தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் ஆகியவை தொடர்பில் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து சுவிஸ் தூதரக அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் விளக்கமளித்தார். அத்துடன், சுவிஸ் அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டு வரும் வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதார உதவிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
சுவிஸ் அரசு கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் மேற்கொண்டு வரும் உதவித்திட்ட செயற்பாடுகளை மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த சுவிஸ் தூதுவர் எதிர்காலத்தில் படிப்படியாக தாம் உதவித்திட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் சுவிஸ் அபிவிருத்தி கூட்டுத்தாபன திட்ட முகாமையாளர் கொன்டீஸ், சுவிஸ் அபிவிருத்தி கூட்டுத்தாபன நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் மார்டின் ஸ்டுடெர் ஆகியோருடன் ஈ.பி.டி.பி.யின் வலிகாம பிரதேச இணைப்பாளர் ஜீவன் ஆகியோர் உடனிருந்தனர்.
17 minute ago
18 minute ago
19 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
19 minute ago
27 minute ago