2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஊர்காவற்றுறையில் ஐ.ம.சு.கூட்டமைப்பு அமோக வெற்றி

A.P.Mathan   / 2011 ஜூலை 23 , பி.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8833 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 805 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தினை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி 20 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 9658, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 340 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 9998 ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .