2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தேர்தலில் வெற்றிபெற்ற த.தே.கூ உறுப்பினர்கள் கிளிநொச்சியில் பதவியேற்பர்

Super User   / 2011 ஜூலை 24 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்நிகழ்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.

இதன்போது அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்  உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் திருகோணமலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • hari Monday, 25 July 2011 01:00 AM

    வாழ்த்துக்கள். இனியாவது மானமுள்ள தமிழன் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.

    Reply : 0       0

    aj Monday, 25 July 2011 04:32 AM

    வாழ்த்துக்கள் !!!
    அடாவடி தனத்துக்கும் மது போத்தலுக்கும் பணத்துக்கும் என்றுமே தமிழர்கள் விலைபோவது இல்லை. பயப்படபோவதும் இல்லை. அத்துமீறல்கள் மற்றும் துன்புறதளுக்கு மத்தியில் கிடைத்த வெற்றி. உலக தமிழ் இனமே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
    என்ன விலை கொடுத்தாலும் எங்களுடைய தமிழ் தேசியத்தை சிதைக்க முடியாது.
    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Pasha Monday, 25 July 2011 02:43 PM

    அபிவிருத்தி என்ற மாயைக்காக சோரம் போகும் இனத்துக்கு இது முன் உதாரணம்.

    Reply : 0       0

    ruban Tuesday, 26 July 2011 05:19 AM

    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி ஒருவன் இருக்கிறன். அவனே உங்கள் பலம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .