Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்;தனின் வருடாந்த தேர்த் திருவிழா எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை திருப்பள்ளயெழுச்சியடன் அரம்பமாகி காலையில் வசந்த மண்டப பூசையும் கொடித்தம்ப பூசையும் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து முருகன் வள்ளி தெய்வயானையுடன் காலை 7.00 மணிக்கு தேரில் வீதியுலா வருவதற்க்காக வெளியால் வரவுள்ளார்.
இம் முறை ஆலய தேர்த் திருவிழாவில் பல ஆயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொள்வாhகள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிக எண்ணிக்கையான அடியவர்கள் கலந்துகொள்வதையிட்டு சுமார் ஆயிரத்திற்க்கு மேற்பட்ட பொலிஸார் ஆலய சுழலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவுள்ளனர்.
இவர்களுடன் இலங்கை சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்கள், சாரணர்கள் நல்லூர் ஆலய தொண்டாகள், யாழ் மாநகர சபை ஊழியாகள் என பலரும் காவல் கடமையில் ஈடுபடவுள்ளனர்.
நல்லூர் தேர்த் திருவிழாவிற்கு வருகை தருவதற்காக யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் விசேட பஸ் சேவைகளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் என்பன ஏற்பாடு செய்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
56 minute ago
3 hours ago