Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
கீரிமலைக் கேணிக்கு அருகாமையிலுள்ள மலசலகூடங்களை பாவிப்பவர்களிடம் நாளை முதலாம் திகதியிலிருந்து பணம் அறவிடப்படவுள்ளது.
கீரிமலைக்கு அதிக எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகள் நாளாந்தம் வந்து செல்கின்ற நிலையில் அங்குள்ள மலசலகூடங்கள் அசுத்தமடைந்து காணப்படுவதுடன் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு நாளும் அங்குள்ள மலசலகூடங்களை பிரதேசசபை ஊழியர்கள் சுத்தப்படுத்தியபோதிலும், அசுத்தமடைந்தே காணப்படுகின்றன. இந்த நிலையில் மலசலகூடங்களை பாவிப்பவர்களிடம் பணம் அறவிடும் நடவடிக்கையை வலிவடக்கு பிரதேசசபை மேற்கொண்டுள்ளது.
இதன் மூலம் மலசலகூடங்களை சுத்தமான முறையில் பேணக்கூடியதாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
56 minute ago
1 hours ago