2025 மே 19, திங்கட்கிழமை

வலி.கிழக்குப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 01 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வலி.கிழக்குப் பிரதேசப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சிறுகதைப் பயிலரங்கு எதிர்வரும் 3ஆம் திகதி சனிக்கிழமை காலை கோப்பாயில் உள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

பிரதேச செயலரும் பண்பாட்டுப் பேரவையின் தலைவருமாகிய மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெறவுள்ள இப்பயிலரங்கில் தொடக்கவுரையை வலி. கிழக்குப் பண்பாட்டுப் பேரவையின் உப தலைவர் ச.லலீசன் ஆற்றவுள்ளார்.

தமிழில் சிறுகதையின் அமைப்பும் உள்ளடக்கமும் என்ற தலைப்பில் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி த.கலாமணியும் ஜெயகாந்தனின் யுகசந்தி – ஒரு பார்வை என்ற தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் இ.ராஜேஸ்கண்ணனும் கருத்துரை வழங்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் பங்கேற்றுப் பயன்பெறும் பயிலுநர்கள் உருவாக்கும்; சிறுகதைகளை உதவிப் பிரதேச செயலர் தாட்சாயணியும் மூத்த எழுத்தாளர் யோகேஸ்வரி சிவப்பிரகாசமும் மதிப்பிட்டுக் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

சிறுகதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் நல்ல சிறுகதைகளை இரசிப்பதற்கு ஆர்வமுடையோருக்கும் இப்பயிலரங்கு பயன்பாடுள்ளதாக அமையும் எனவும் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவராயினும் சனிக்கிழமை காலை வருகை தந்து பயன் பெறலாம் எனவும் வலி.கிழக்குப் பண்பாட்டுப் பேரவையினர் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X