Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வலி. வடக்குப் பிரதேசசபையின் மயிலிட்டி உபஅலுவலகம் நேற்று வியாழக்கிழமை முதலாம் திகதி தொடக்கம் வசாவிளான் குட்டியபுலத்தில் அமைந்துள்ள பொதுநூலகக் கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது.
வசாவிளான் கட்டுவன் மற்றும் மயிலிட்டிப் பிரதேச மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக கடந்த காலத்தில் இந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகள் மற்றும் இடப்பெயர்வுகள் காரணமாக தற்காலிகமாக மல்லாகத்தில் அமைந்துள்ள வலி. வடக்குப் பிரதேச சபையுடன் இணைந்து இவ் உபஅலுவலகம் இயங்கி வந்தது.
வலி. வடக்குப் பிரதேசசபையின் மக்கள் பிரதிநிதிகளின் முதலாவது சபைக் கூட்டத்தில் மயிலிட்டிப் பிரதேச உபஅலுவலகத்தை இடம் மாற்றுவதென தீர்மானிக்கப்பட்டது. தற்போது மக்கள் பகுதி பகுதியாக வசாவிளான் மற்றும் கட்டுவன் பகுதிகளில் குடியேற அனுமதிக்கப்பட்மையால் மக்களுடைய நன்மை கருதி இவ்உபஅலுவலகம் இடம் மாற்றப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
57 minute ago