2025 மே 19, திங்கட்கிழமை

அதிகரிக்கும் டெங்குநோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்த சகலரின் ஒத்துழைப்பு அவசியம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 02 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் இந்த வருடம்  ஜனவரி மாதத்தின் பின்னர் குறைவடைந்திருந்த டெங்குநோய்த் தாக்கம் மீண்டும் கடந்த ஓகஸ்ட்  மாதத்திலிருந்து சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் டெங்கு நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டுமென யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்படும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் வழிவகைகள் குறித்து யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று  வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

சுகாதாரப் பிரிவினர் தனித்து எந்தவொரு நோயின் தாக்கத்தையும் கட்டுப்படுத்த முடியாதெனவும்  அது  சமூகக் கட்டமைப்பிலுள்ள அனைத்துத் தரப்பினரினதும்  பங்களிப்புடன் மேற்கொள்வதே வெற்றியளிக்குமெனவும்  அவர் குறிப்பிட்டார். இதற்கு யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் யாழ்.மாநகர சுகாதாரப் பகுதியினர் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், பாடசாலை மட்டத்திலும் கிராம மட்டத்திலும் பிரதேசசபை மட்டத்திலும்  இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினார்.

மக்களுக்கு டெங்குநோய் பற்றிய விழிப்புணர்வு இன்மையே யாழ். மாவட்டத்தில் டெங்குநோய் தீவிரமடைவதற்கு காரணமெனவும் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.  டெங்குநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் வைத்தியசாலைகளில்  ஏனையவர்களுக்கும் நோய் தொற்றாதவாறு வைத்தியசாலைக்கு புகையூட்டும் நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X