Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 02 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இன்று முதல் இரவு ஆறு மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரை நடமாடும் பொலிஸ் சேவையை நடத்தவுள்ளதோடு பொலிஸார் துவிச்சக்கர வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுமுள்ளனர் என யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ்நிலைய இன்ஸ்பெக்டர் சமன் சிஹேர தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்படி கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்...
மர்ம மனிதன் என்று யாரும் இல்லை. உங்களுக்குள் இருக்கும் ஒரு மனிதனாக அவன் இருக்கலாம். பொதுமக்கள் ஓடுகிறவர்களைத் துரத்துகிறார்கள். அத்தோடு குழுக்களாக சென்று கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். சட்டத்தை கையில் மக்கள் எடுத்தால் நாங்கள் பாத்துக் கொண்டு இருக்கமாட்டோம்
பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் நல்ல தொடர்புகள் இருக்கின்றன. மர்ம மனிதனை யாரும் கண்டால் பொலிஸாருக்கு அறியத்தாருங்கள். நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் எக்காரணம் கொண்டும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு உங்களுக்கு பாதுகாப்பு அரணாக வருகின்ற பொலிஸாரை தாக்க வேண்டாம். தாக்கினால் எம்மைப் பாதுகாப்பதற்காக நாங்கள் உங்களைத் தாக்க வேண்டி வரும் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
யாழ். மக்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளிலும் விளிப்புக் குழுக்களையும் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு ஒன்றையும் அமைக்கவுள்ளோம். யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இன்று முதல் இரவு ஆறு மணிமுதல் மறுநாள் காலை 6 மணிவரை நடமாடும் பொலிஸ் சேவையை நடத்தவுள்ளதோடு பொலிஸார் துவிச்சக்கர வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுமுள்ளனர் என்று தெரிவித்தார்.
roshan Saturday, 03 September 2011 06:37 AM
பொலிசாருக்கு கொண்டாட்டம். மக்களுக்கு திண்டாட்டம்.
Reply : 0 0
Winter Saturday, 03 September 2011 02:31 PM
யார் வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம் பொது மக்கள் எடுத்தால் மட்டும் போலீசார் பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள்..? உங்க அம்மா.. அம்மா, எங்க அம்மா சும்மாவா..?
சட்டம் கையில் இருப்பவர்கள் சரியாக செயற்பட்டால் பொதுமக்கள் ஏன் அதை கையில் எடுக்கிறார்கள்?
Reply : 0 0
pathmadeva Sunday, 04 September 2011 03:06 PM
பொதுமக்கள் ஓடுகிறவர்களைத் துரத்துகிறார்கள் என்றால், ஓடுகிறவர்கள் யார்? அவர்கள் ஏன் ஓட வேண்டும்?
Reply : 0 0
tvamban Sunday, 04 September 2011 04:16 PM
நரி வந்தாலென்ன, நாய் வந்தாலென்ன? கடிப்பது மக்களைத்தானே.
Reply : 0 0
karm Monday, 05 September 2011 04:25 AM
எலிகளுக்கு நல்ல கொண்டாட்டம் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
51 minute ago
1 hours ago