Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
பனை அபிவிருத்தி சபையினால் யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பனம் விதைகளை நடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் காணப்படும் இந்து மயானங்கள், பொதுவிடங்கள் ஆகியவற்றில் இந்த பனம் விதைகள் நடப்படவுள்ளன.
நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் ஐயாயிரம் பனம் விதைகளும் ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் ஐயாயிரம் பனம் விதைகளும் வேலனை பிரதேச செயலகப் பிரிவில் பத்தாயிரம் பனம் விதைகளும் காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் பத்தாயிரம் பனம் விதைகளும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் ஐயாயிரம் பனம் விதைகளும் நல்லூர் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் ஐயாயிரம் பனம் விதைகளும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் ஐயாயிரம் பனம் விதைகளும் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் பத்தாயிரம் பனம் விதைகளும் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் பத்தாயிரம் பனம் விதைகளும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இருபதாயிரம் பனம் விதைகளும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் ஐயாயிரம் பனம் விதைகளும் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் பதினையாயிரம் பனம் விதைகளும் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் பதினையாயிரம் பனம் விதைகளும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் பத்தாயிரம் பனம் விதைகளும் மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருபதாயிரம் பனம் விதைகளும் நடப்படவுள்ளன.
கடந்த வருடம் இரண்டரை இலட்சம் பனம் விதைகள் நடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
50 minute ago