2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் பொதுமக்களை தெளிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதியைப் போக்கும் வகையில் விசேட விழிப்புணர்வூட்டுவதற்கான கலந்துரையாடலொன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு யாழ். பொலிஸாரினால் நடத்தப்படவுள்ளதாக  யாழ். பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.  

இந்த நிகழ்வில் பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், யாழ். சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்

இனந்தெரியாத நபர்களின் விவகாரம் தொடர்பில் பாதிப்படைந்த மக்களை வருகை தருமாறு யாழ். பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X