Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 06 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி)
யாழ். காரைநகர் கடற்படை முகாம் விரிவாக்கத்திற்காக பொதுமக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான முதற்கட்ட நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
முதற்கட்டமாக 46 பேருக்கு இந்த நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் காணி அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோனினால் வழங்கி வைக்கப்பட்டன.
காணிகளின் அளவுக்கேற்ப விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மதீப்பீடு செய்யப்பட்ட பெறுமதிக்கேற்ப மேற்படி காணி உரிமையாளர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.
100க்கும் மேற்பட்ட காணி உரிமையாளர்களுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் இவர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் படிப்படியாக வழங்கி வைக்கப்படுமெனவும் காரைநகர் பிரதேச செயலக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
காரைநகர் உதவி அரசாங்க அதிபர் இ.ஜெயசீலனின் தலைமையில் காரைநகர் கலாநிதி தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காணி அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன், பிரதி காணியமைச்சர் ஸ்ரீபால கம்லத், காணி அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
42 minute ago