2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் விபத்துக்களை கட்டப்படுத்த விசேட பொறிமுறை

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் வாகனங்களினால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் விசேட பொறிமுறையொன்றை ஏற்படுத்தி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு அறிவித்துள்ளது

யாழ்ப்பாணத்தில் வாகன நெருக்கடிகள் காரணமாக விபத்துக்கள் அதிகரித்து செல்வதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குரிய பொறிமுறைகள் வகுக்கப்பட்டு வாகன சாரதிகளின் நடவடிக்கைகளை விசேடமாக கண்காணித்து விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

விபத்துக்களினால் யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதாகவும் இதனால் விபத்துக்களை   உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டிருப்பதாகவும்  யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X