2025 மே 19, திங்கட்கிழமை

தொண்டமனாறு கடலில் மூழ்கி இளைஞர் பலி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,தாஸ்,கிரிசன்)
யாழ். தொண்டமனாறு கடலில் மூழ்கி இளைஞனொருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இணுவில் கிழக்கு ஆச்சிரம் வீதியைச் சேர்ந்த இராசமனோகரன் மகிதன் வயது 23 என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

 

குறித்த நபர் தொண்டமனாறு கடலில் நீராட சென்ற வேளை மக்கள் பாவனைக்காக நிர்ணயிக்கப்பட்ட எல்லையினைத் தாண்டிச் சென்று நீராடியதால் சுழியில் சிக்கி மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X