Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக்கிற்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
யாழ். நான்காம் குறுக்குத் தெருவிலுள்ள அமெரிக்கன் கோணர் நிலையத்திற்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
'விக்கிலீக்ஸ் என்ன வேதாந்தமா? கொடுத்த தகவலுக்கு ஆதாரம் என்ன?', 'தமிழர் விரும்புவது ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சமவுரிமை', 'நீர் ராஜதந்திரியா அல்லது பொய்பேசும் மந்திரியா', 'விலைபோகாத எங்கள் தமிழ் பெண்களை இழிவுபடுத்த வந்தீரோ' முதலான கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.
இதேவேளை, அமெரிக்க கோணரில் யாழ். பல்கலைக்கழக பிரதிநிதிகளை சந்திப்பதற்காக வந்த ரொபர்ட் ஓ பிளேக் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதன் காரணமாக அதில் கலந்துகொள்ளாது திரும்பிச்சென்றுள்ளார்.
aj Tuesday, 13 September 2011 08:02 PM
ஹ ஹ ஹ லங்காவின் இன்னும் ஒரு தோற்ற நரி தந்திரம் . அரசின் இன்னுமோர் முகம். இப்போ யார் பொய் ? யப்பா முடியல இந்த இந்த பொய் புழுக்கள் மற்றும் நாடகம்.
விக்கி லீக்ஸ் பற்றி பேசுவதுக்கு லங்கா அரசுக்கு எதுவித அருகதையும் இல்லை.
எங்களுக்கு லங்காவில் இருக்கும் ஊடக சுதந்திரம் பற்றி நன்கு தெரியும். மக்கள் என்ன செய்யும்.
Reply : 0 0
neethan Tuesday, 13 September 2011 08:26 PM
பல்கலைக்கழக பிரதிநிதிகளை சந்திக்க முடியாமல் திரும்பிச்சென்றது, ரொபேர்ட் ஒ பிளக்கிற்கு பின்னடைவுதான். சர்வதேச ஊடகங்கள் எவ்வாறு செய்தி வெளியிடுமோ?
Reply : 0 0
KLM Tuesday, 13 September 2011 08:57 PM
மக்களுக்கு இன்னும் சுதந்திரம் இல்லை. என்பது விளங்குது
Reply : 0 0
selvam Tuesday, 13 September 2011 09:54 PM
விக்கிலீக்ஸ் சொல்லுவது தான் இப்பொழுது வெதாந்தம். வெள்ளைகாரன் அமுவும் அமெரிக்கன் சொன்னால் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். சனல் 4 இல் எங்களினப் பெண்ணை நிர்வாணமாக காட்டியபோது அவற்றை ஆதரித்தவர்கள் தமிழர்கள். ஆனால் எந்தவொரு வெள்ளைகாரப் பெண்ணையாவது இவர்கள் நிர்வாணமாக காட்டுவார்களா?
Reply : 0 0
sahabdeen Tuesday, 13 September 2011 10:02 PM
முப்பது வருடம் அரசாங்கமும் பயங்கரவாதம் என்ற பெயயரில் மக்களின் சுதந்திரத்தை கட்டுபடுத்தியது. இயக்கங்களும் தனி நாடு என்ற பெயரில் மக்களின் சுதந்திரத்தை கட்டுபடுதியது
இப்பொழுது இயக்கங்கள் இல்லை. ஆனால் அரசு பழைய தொழிலை தொடர்ந்து செய்து வருகிறது .......... அப்பாவி மக்கள் ........
காலம் ஒருநாள் வரும். சூரியன் ஒருகாலமும் முகில்களுக்கு பின்னால் மறைந்து இறப்பது இல்லை.
Reply : 0 0
Jakkoo Tuesday, 13 September 2011 10:18 PM
மக்களை நல்ல padiyaaga eematri arasival.
Reply : 0 0
Ratnam Ganesh Wednesday, 14 September 2011 03:11 PM
No comments!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025