Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான அரசியல் தீர்வொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டுமென யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையப்பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ். குடாநாட்டிற்குச் சென்ற தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்குடன் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே அவர்கள் இந்த வலியுறுத்தலை விடுத்தனர்.
ஜனநாயக ரீதியாக தாங்கள் பேசமுடியாத சூழ்நிலையில் உள்ளோம். தமது உரிமைக்காகக் கூட வாய்திறக்க முடியாத நிலையிலுள்ளோம். அரசியல் அழுத்தங்கள் காரணமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனரென யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையப்பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் இலங்கை அரசியல்வாதிகளினால் சிதறடிக்கப்படுகின்றன. தமக்கான தீர்வு முயற்சியில் சர்வதேச சமூகம் ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டுமென ரொபர்ட் ஓ பிளேக்கிடம் யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையப்பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இவர்களின் கருத்துக்களை செவிமடுத்த ரொபர்ட் ஓ பிளேக், யாழ். நிலைவரம் தொடர்பான விடயங்களை தமது உயர்மட்டங்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளதாகக் கூறியதாக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையப் பிரதிநிதிகள் தெரித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025