2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் உயர் கல்வி அனுமதி சம்பந்தமான கண்காட்சி

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம் ஞானம்ஸ் ஹோட்டலில் உயர் கல்வி அனுமதி சம்பந்தமான கண்காட்சியொன்று நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மலேசியா பல்கலைக்கழகங்களிலிருந்து வருகை தந்துள்ளவர்களினால் நடத்தப்படவுள்ளது.

இக்கண்காட்சியில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இத்தகைய பயிற்சிநெறிகள் சம்பந்தமான கண்காட்சிகள் கொழும்பில் நடைபெற்ற நிலையில் இந்த வருடம்   கல்விக் கண்காட்சி யாழ்ப்பாணத்திலும் நடத்தப்படவுள்ளன.

மாணவர்கள் தமது உயர் கல்வி சம்பந்தமான தகவல்களை முகவர்களின்றி நேரடியாக உரிய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு   பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X