Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 18 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உயிரோட்டமாக குரல் கொடுப்பதற்காகவும் ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுகின்ற வன்முறைகளை எதிர்த்து ஜனநாயக முறையில் நடவடிக்கை எடுப்பதற்காக யாழில் 'சுதந்திர ஊடகக் குரல்' எனும் ஊடக அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்த ஊடக அமைப்பு ஆரம்பிப்பதற்கான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். இந்து கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அமைப்பிற்கான நிர்வாக தெரிவு இடம்பெற்று அமைப்பின் யாப்பும் வெளியிடப்பட்டது.
சுதந்திர ஊடகக் குரல் அமைப்பின் தலைவராக இரா.புத்திரசிகாமணி, உப தலைவராக அருட்தந்தை ஏ. றொஷன் அடிகளார், செயலாளராக திலிப் அழுதன், உப செயலாளராக கொ.றுஷாங்கன் ,பொருளாராக எஸ்.ரஜிவன் ஆகியோர் உட்பட ஆறு நிர்வாக உறுப்பினர்களும் ஆட்சிக்குழு மூதவை (செனற்) உறுப்பினர்களாக ஜெ.டானியல், தி.சிவகுமார், எம்.அருள்குமரன், செல்வி த.தமயந்தி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
49 minute ago
1 hours ago